Monday, December 23, 2024
HomeLatest Newsசங்கிலியனின் குடும்பப் படத்தை வெளியிட்ட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

சங்கிலியனின் குடும்பப் படத்தை வெளியிட்ட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்  கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் இன்றையதினம் காலை 7.30மணிக்கு கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது.

சங்கிலியனின் குடும்ப படத்தினை கல்லூரியின் பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம் திரைநீக்கம் செய்து வைத்தார்.

சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் திருமதி சுதர்சினி விக்கிணமோகன் நெறிப்படுத்தியிருந்ததுடன் கந்தையா முத்தம்மா நினைவாக திருமதி மிருணாளினி இதற்கான அனுசரனையினையும் வழங்கினார். 

இதேவேளை யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியில் இதற்கு முன்னர் வீர சங்கிலியன் மன்னன் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.

அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரி தமிழ் மன்றத்தால் ஆண்டுதோறும்  “வீரசங்கிலி” ஆண்டுமலர் வெளியிடப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான நிலையில் சங்கிலிய மன்னனை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியும் தனது அடையாளமாக பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Recent News