Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsசீன வெளியுறவு அமைச்சர் காணாமல் போன விவகாரம் -வெளியான காரணம்..!

சீன வெளியுறவு அமைச்சர் காணாமல் போன விவகாரம் -வெளியான காரணம்..!

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் மாயமான பிண்ணனியில் அவரது காதல் விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் . இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை.

கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்த தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து ‘எங்கே கின் கேங்?’ என்று சர்வதேச ஊடகங்களும், சீன மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், கின் கேங் மாயமானதற்கு காரணமாக இருப்பவர் பத்திரிகையாளர் ஃபூ சிஸாடியான் தான் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Recent News