Wednesday, December 25, 2024
HomeLatest Newsரகசிய ஆவணங்களை பதுக்கிய விவகாரம்...!முன்னாள் அதிபர் டிரம்ப் கைது...!

ரகசிய ஆவணங்களை பதுக்கிய விவகாரம்…!முன்னாள் அதிபர் டிரம்ப் கைது…!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர் வால்ட் நவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிரம்ப், 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான அரசின் ரகசிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்காது எடுத்துச் சென்றதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், இராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் விசாரணைக்காக மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜராகிய வேளை
அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர் வால்ட் நவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஆபாச பட நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News