Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஜிபலியாவில் தற்காலிக சண்டை நிறுத்தத்தை அறிவித்தது இஸ்ரேலிய ராணுவம்..!

ஜிபலியாவில் தற்காலிக சண்டை நிறுத்தத்தை அறிவித்தது இஸ்ரேலிய ராணுவம்..!

காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வடக்கு காஸாவிலிருந்து சலா அல்-தின் நெடுஞ்சாலை வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.


அதேபோல் ஜபாலியாவில் காலை 10 மணி முதல் நான்கு மணி நேரம் போர் இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து அல்-வெஹ்தா தெரு வழியாக மக்கள் சலா அல்-தின் பாதையை அடைய ஒரு மனிதாபிமான நடைபாதையும் இருக்கும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேலிய இராணுவத்தின் அறிவிப்பை மீறி மருத்துவ வசதியை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது அல்ல என்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகின்ற பொது மக்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவதாகவும் மருத்துவமனையின் உள்ளே இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News