Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅயர்லாந்து வீரர் ஹற்றிக் சாதனை

அயர்லாந்து வீரர் ஹற்றிக் சாதனை

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் ஜொஷ் லிட்ல் ஹெட் – ஹற்றிக் சாதனை படைத்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியிலேயே ஜொஷ் லிட்ல் ஹெட்-ட்ரிக் சாதனையை நிலைநாட்டினார்.

நியூஸிலாந்து இன்னிங்ஸில் 19ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனை கெரத் டிலேனி எடுத்த பிடி மூலம் ஆட்டமிழக்கச் செய்த லிட்ல், அடுத்த 2 பந்துகளில் ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் களம் விட்டு வெளியேறச் செய்து ஹெட்-ட்ரிக் சாதனையை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News