Thursday, January 23, 2025
HomeLatest Newsஉலகில் இதுவரை யாரும் புசிக்காத பழம் அறிமுகம்..!ஜப்பான் விவசாயிகள் அசத்தல்..!

உலகில் இதுவரை யாரும் புசிக்காத பழம் அறிமுகம்..!ஜப்பான் விவசாயிகள் அசத்தல்..!

உலக மக்கள் இதுவரை சுவைக்காத புதிய வகை பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை, ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், முதன்முறையாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, எலுமிச்சை மற்றும் தர்பூசணி செடிகளை இணைத்து இந்த கலப்பின பழத்தை உற்பத்தி செய்து ஜப்பானிய விவசாயிகள் அசத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த எலுமிச்சை தர்பூசணி பழத்தை உட்கொள்பவர்கள் புளிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்பை உணர முடியும் எனவும் அந்த விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்த பழம் ஜப்பானிய சந்தையில் 23.30 அமெரிக்க டொலர்களிற்கு விற்கப்படுகின்றது. அதாவது, இலங்கை மதிப்பில் ஒரு பழத்தின் விலை சுமார் 7000 ரூபாவாகும்.

Recent News