Saturday, December 28, 2024
HomeLatest Newsகோட்டா அடுத்தடுத்து செல்லவுள்ள நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

கோட்டா அடுத்தடுத்து செல்லவுள்ள நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மாலைத்தீவுக்கு சென்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாக மாலைதீவு அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recent News