உலகம் முழுவதும் 20 கோடி ட்விட்டர் பயனாளர்கள் பற்றிய விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக் தெரிவித்துள்ளது.
இந்த பயனாளர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி எண்களும் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்களின் இருப்பிடம் பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளது.
இந்த விபரங்கள் கடந்த 2021ம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள ஹட்சன் ராக் நிறுவனம், ட்விட்டர் நிறுவனத்தை எலன் மாஸ்க்(Elon Musk) வாங்குவதற்கு முன்னதாகவே இவை நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.