இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனை நேற்றைய தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உரையாடலில் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உறவு நிலைகள் குறித்த தெளிவூட்டல்கள் இடம் பெற்றதாகவும் மேலும் உக்ரைன் ரஷ்ய போரினால் உலகில் ஏற்பட்டு வரும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் பிரான்ஸ் அதிபர் கவலை தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதேவேளை இந்தியா தனது அணு சக்தி தொடர்பில் பிரான்சிடம் ஆலோசனைகளையும், உதவிகளையும் கேட்டிருப்பதாகவும் இதற்கு பிரான்ஸ் மிகவும் சாதகமான பதில்களை வழங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.