Thursday, December 26, 2024
HomeLatest Newsதுப்பாக்கிக்காயத்துடன் தீவிரவாதிகளைத் தாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இந்திய இராணுவ நாய்!

துப்பாக்கிக்காயத்துடன் தீவிரவாதிகளைத் தாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இந்திய இராணுவ நாய்!

இந்திய இராணுவத்திடம் பயிற்றுவிக்கப்பட்ட zoom என அழைக்கப்படும் வேட்டை நாய், தீவிரவாதிகளை இனங்கண்டு அவர்களைத் தாக்கி இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கும் அளவிற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் டாங்பவ பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து, இந்திய இராணுவமும் காவல்படையும் தேடுதல் பணிகளை ஆரம்பித்திருந்தன.

இந்த விசேட நடவடிக்கைக்கு zoom உம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் இனங்காணாப்பட்டு, போலீசார் – தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் zoom பலமாக காயம் பட்டுள்ளது.

இரண்டு துப்பாக்கிக் காயங்களுடன் தொடர்ந்து தீவிரவாதிகளைத் தாக்கிய zoom இன் துணிவும் செயலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இறுதியாக இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதன் பின்னரே zoom தனது வேலையில் இருந்து பின்வாங்கியுள்ளது.

இதுவரை தெற்கு காஷ்மீரில் நடைபெறும் பல விசேட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு zoom துணையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News