Tuesday, December 24, 2024
HomeLatest Newsகுளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட உடல் திடீரென உயிர்பெற்றெழுந்த சம்பவம்!

குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட உடல் திடீரென உயிர்பெற்றெழுந்த சம்பவம்!

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்த நபரொருவரின் உடல் இரண்டு நாட்கள் குளிர்சாதனப்பெட்டியி;ல வைக்கப்பட்டதன் பின்னர், திடீரென அவர் உயிர்பெற்றெழுந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கிடையில் இருந்து அஹமது என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை உரியவாறு அடையாளங்காண்பதற்காக அவரது உடல் மருத்துவ மனையில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டது.

அவரது உடல் அடையாங்காணப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் இறுதிச்சடங்குக்காக அஹமதுவின் உடல் கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், அவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், இப்போது அவரது உடல்நிலை தேறிவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Recent News