Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஇந்தியாவின் காலில் வீழ்ந்த முக்கிய நாடு - வியப்பில் உலக நாடுகள்...!

இந்தியாவின் காலில் வீழ்ந்த முக்கிய நாடு – வியப்பில் உலக நாடுகள்…!

பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூகினியா நாட்டிற்கு சென்றிருந்த வேளையில் , அவருக்காக அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரப், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தை மாற்றியமைத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த நாட்டில் காலம்காலமாக ஒரு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது.

அதாவது மாலையில் சூரியன் மறைந்த பின்னர் வரும் உலக தலைவர்களுக்கு பப்புவா நியூகினியா சார்பில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பப்புவா நியூகினியா நாட்டிற்கு வரும் தலைவர்களை வரவேற்க அந்நாட்டில் பிரதமராக இருப்பவர் நேரில் செல்வது இல்லை.

ஆனால் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரப் நேரடியாக சென்றுள்ளதுடன் , காலை தொட்டு வணங்கியுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பும் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதமர் மோடிக்காக அந்த நாடு தனது வழக்கத்தில் உள்ள மரபுகளை கைவிட்டு உரிய முறையில் அவரை வரவேற்றமை உலக நாடுகளையே வியப்படைய செய்துள்ளது.

Recent News