ஆஸ்திரேலியாவின் மாநிலங்களில் தீவிரமான வெப்ப அலை தாக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டெரிக்கும் அனல்காற்று அடுத்த சில நாள்களுக்கு வாட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சிட்னி , மெல்பர்ன் ஆகிய நகரங்களில் கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மெல்பர்ன் நகரில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசையும் சிட்னியில் 35 டிகிரி செல்சியசையும் எட்டும் என்று வானிலை ஆய்வகம் கூறுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவிலும் கடும் அனல்காற்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னியில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத கடலோரப் பகுதிகளில் நீந்தவேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.