Sunday, December 29, 2024
HomeLatest NewsIndia Newsபெண் தோழியுடன் ஸ்கூட்டரில் உலா வந்த கணவர் - போட்டு கொடுத்த போக்குவரத்து துறையால் காண்டான...

பெண் தோழியுடன் ஸ்கூட்டரில் உலா வந்த கணவர் – போட்டு கொடுத்த போக்குவரத்து துறையால் காண்டான மனைவி..!

கணவர் ஒருவர் பெண் தோழியுடன் ஸ்கூட்டரில் சென்றமையால் கணவர் மீது மனைவி பொலிஸில் புகார் கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தற்போது கேரளாவின் பெரும்பாலான நகரங்களில் சாலை கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ஒருவர், தனது தோழியுடன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் போடாமல் சென்றுள்ளார்.

இதையடுத்து ஹெல்மெட் போடாமல் பெண் தோழியுடன் சென்றவர் வீட்டிற்கு சாலை கண்காணிப்புக் கேமரா எடுத்த படத்தையும் நோட்டீஸில் இணைத்து போக்குவரத்து பொலிஸார் அனுப்பியுள்ளனர்.

அந்த ஸ்கூட்டர் அவரது மனைவிக்குச் சொந்தமானது என்பதுடன் வாகனம் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டும் இருந்துள்ளது.

இதனால், நோட்டீஸும், அபராதம் தொடர்பான விடயமும் குறுந்செய்தி மூலம் அவரது அவரது மனைவிக்குச் சென்றுள்ளது.

இதுகுறித்து மனைவி கணவரிடம் கேட்க அது யாரோ ஒரு பெண் என்றும், தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவருக்கு உதவி மட்டுமே செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் அதனை நம்பாது மனைவி அவருடன் கணவருடன் சண்டை போட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து கணவர் மீது கரமணா பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி தன்னையும், தனது 3 வயது குழந்தையையும் கணவர் தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து கணவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Recent News