Sunday, January 12, 2025
HomeLatest Newsமனைவியின் பற்களை கழற்றிய கணவன்- நடந்தது என்ன?

மனைவியின் பற்களை கழற்றிய கணவன்- நடந்தது என்ன?

மனைவியின் பற்களை அவரது கணவன் கழற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவர் மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூப்பன்ன வெலிவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

அத்தோடு நேற்று முன்தினம் (29) இரவு மது போதையில் வந்த கணவனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இறுதியில் பெண்ணின் முகத்தில் கணவன் தாக்கியுள்ளார்.

இதன்போது அப்பெண்ணின் நான்கு பற்கள் கழன்று விழுந்துள்ளன.

அத்துடன் இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்தப் பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கணவன் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற நபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Recent News