இறந்த போன மனைவியில் ஆசையை நிறைவேற்றும் வகையில் வாழ்நாள் முழுவதும் தான் சம்பாதித்த பணத்தை செலவழித்து, பிரம்மாண்டமாக கோயிலை கட்டிய கணவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பண்டல்கன்ட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிபி சன்சோரியா என்பவரே இவ்வாறு கோயில் காட்டியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு இறந்த தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற, சதர்பூர் பகுதியில் பிரம்மாண்டமான ‛ராதாகிருஷ்ணா’ கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த கோயிலில் மார்பிள் கற்களில் கலையை செதுக்கி, அழகு செய்யப்பட்டுள்ளதுடன், இவ் ஆலயத்திற்கான பணிகளில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்த முஸ்லீம் கலைஞர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக சன்சோரியா ‛‛ ராதாகிருஷ்ணருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது எனது மனைவியின் நீண்ட கால ஆசை. மனைவி இறந்த பின்னர் கோயில் கட்டியே தீருவது என்ற தீர்மானத்தை எடுத்ததுடன், ரூ.1.50 கோடியில் கோயில் கட்டி முடிக்க 6 ஆண்டுகள் மற்றும் 7 நாட்கள் ஆகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் வரும் 29 ஆம் திகதி முதல் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் திறக்கப்படும் எனவும் திருமணத்திற்கு பின்னர் அனைத்தும் அன்பு தான். சிறிய விஷயங்களுக்காக மனைவியையும், அன்பையும் இளைஞர்கள் ஒரு போதும் கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக இறந்து போன மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், கோயில் கட்டிய சன்சாரியா வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.