அழகி போட்டியில் தனது மனைவிக்கு 2 ஆம் இடத்தினை வழங்கியமைக்காக கணவர் ஒருவர் சூட்டப்பட கிரீடத்தை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. அங்கு மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றுள்ளது.
அதில், பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய இரு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதையடுத்து, வெற்றியாளரை அறிவிப்பதற்காக இரு போட்டியாளர்களை மேடையேற்றபட்ட நிலையில், போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
அதன் பொழுது யாரும் எதிர்பாராத விதமாக போட்டியில் 2 ஆம் இடத்தினை பெற்ற நதாலியின் கணவர் மேடை ஏறி பெலினிக்கு சூட்டப்படவிருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்துள்ளார்.
அது மட்டுமன்றி, கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்துள்ளார். இதனால் அந்த கிரீடம் துண்டு துண்டாக உடைந்துள்ளது.
இதனால், அங்கிருந்த நடுவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் விழா ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அவரை மேடையை விட்டு கீழே இறக்கியுள்ளனர்.
நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்ற ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக நாதலியின் கணவர் கூறியுள்ளார்.
ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.