Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஉயிர் தப்பிக்க பல மணிநேரமாக கட்டிட மேற்கூரை மேல் நின்ற குதிரை.!!

உயிர் தப்பிக்க பல மணிநேரமாக கட்டிட மேற்கூரை மேல் நின்ற குதிரை.!!

பிரேசில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடும் வெள்ள பாதிப்பில் சிக்கிய குதிரை ஒன்று, வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் கட்டிடம் ஒன்றின் மேற்கூரை மீது பல மணித்தியாலமாக நின்று கொண்டிருந்தது.போர்ட்டோ அலிகர் பெருநகர பகுதிக்குட்பட்ட கனோவாஸ் நகரில் சரிந்து விழ கூடிய அபாய சூழலில், கட்டிடத்தின் மேற்கூரையில் நிற்க முடியாமல், அந்த குதிரை தவித்தபடி இருந்தது.

மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையின் ஒளி சிறிதளவே இருந்த சூழலில், இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு குழுவினர் வந்தனர்.சமூக ஊடகத்தில் கேரமேலோ என பாசத்துடன் பெயரிட்டு நெட்டிசன்களால் அழைக்கப்படும் அந்த குதிரை, மிதவை படகு ஒன்றின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

Recent News