Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsபிரான்ஸ் நாட்டின் உயரிய விருது..!முதலாவதாக பெற்ற இந்திய பிரதமர்..!தன்வசமாக்கிய பிரதமர் மோடி..!

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது..!முதலாவதாக பெற்ற இந்திய பிரதமர்..!தன்வசமாக்கிய பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

அதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்ததை தொடர்ந்து, பிரதமர் எலிசபெத் போர்ன், விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்றுள்ளார்.

அதன் பின்னர், ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் மிகவும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

அதையடுத்து, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடியுள்ளார்.

அதன் பின்னர், பிரான்சிலுள்ள எலிசி அரண்மனைக்குச் சென்ற பிரதமர் மோடியை, அதிபர் இம்மானுவல் மேக்ரான், அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருக்க உற்சாகமாக வரவேற்றுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்” விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்த விருதானது, இராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கௌரவமாக.

இந்நிலையில், இந்த விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News