Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsபிரதமரின் பெயர் தெரியாது விழித்த மணமகன்..!திருமணத்தை நிறுத்திய மணமகள்..!வினோத சம்பவம்..!

பிரதமரின் பெயர் தெரியாது விழித்த மணமகன்..!திருமணத்தை நிறுத்திய மணமகள்..!வினோத சம்பவம்..!

மணமகனுக்கு பிரதமரின் பெயர் தெரியாத காரணத்தினால் பெண்ணொருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான சிவசங்கருக்கும் பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணமகன் குடும்பத்தினர், திருமணத்திற்கு முந்தைய சடங்குககளிற்காக ரஞ்சனா வீட்டுக்கு சென்ற வேளை மணமகளின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பதில் தெரியாது விழித்துள்ளார்.

இதனால், மணமகள் குடும்பத்தினர் மணமகனுக்கு இது கூட தெரியவில்லை என்று குழப்பம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த தகவல் ரஞ்சனாவின் காதுக்கும் எட்டிய நிலையில் பிரதமரின் பெயர் தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கிராமத்து தலைவர்கள் முன்னிலையில் இருவீட்டாரும் பேச்சு நடத்திய போது மணமகனின் தம்பி ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆயினும், ஆனந்தின் படிப்பறிவை சோதிக்கும் நோக்கில் மணமகள் விட்டார், அவரிடம் சில பொது அறிவு கேள்விகளை கேட்க அதற்கு அவர் சரியாக பதிலளித்துள்ளார். அதன் பின்னர், ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனால் விரக்தியடைந்த, மணமகனின் தந்தை துப்பாக்கியால் மிரட்டி இளைய மகனுக்கும், ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைத்ததாகவும், அவருக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை என்றும் பொலிஸில் புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில், இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent News