Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsமண்டபம் வரை புல்டோசரில் சென்ற மணமகன்..!சிக்கலில் மாட்டிய சாரதி..!

மண்டபம் வரை புல்டோசரில் சென்ற மணமகன்..!சிக்கலில் மாட்டிய சாரதி..!

இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக திருமண மண்டபம் வரை புல்டோசரில் சென்ற சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான அங்குஷ் ஜெய்ஸ்வால் என்பவரே இவ்வாறு புல்டோசரில் சென்றுள்ளார்.

அத்துடன், மணமகன் ஜெய்ஸ்வால் மட்டுமன்றி அவரது உறவுக்கார பெண்கள் இருவரும் புல்டோசர் முன்பாக அமர்த்து திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில், இது குறித்த காணொளிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் வைரலாகியுள்ளது.

அவ்வாறான சூழலில், இந்த விடயம் பொலிஸாரின் பார்வைக்கு சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து புல்டோசர் சாரதி மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

Recent News