Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsபிரியாணியால் தோனிக்கு உருவம் கொடுத்த பெண்..!குவியும் பாராட்டுக்கள்..!

பிரியாணியால் தோனிக்கு உருவம் கொடுத்த பெண்..!குவியும் பாராட்டுக்கள்..!

ஓவியர் ஒருவர் பிரியாணியால் தோனியின் உருவம் வரைந்தமை அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஓவியரான அறிவழகி என்பவரே இவ்வாறு பிரியாணியில் தோனிக்கு உருவம் கொடுத்துள்ளார்.

அவர், 2 அடியில் 2 கிலோ பிரியாணியை பயன்படுத்தி தோனியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளமை பாராட்டப்பட்டு வருகின்றது.

ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு ரங்கோலியாக வரைந்து வருகின்றார்.

அத்தூடு, காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுவதற்கு இருந்த நிலையில் அதில், சென்னை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தோனிக்கு வாழ்த்த தெரிவிக்கும் வகையில் இதனை வரைந்துள்ளார்.

அதற்காக அவர் 2 கிலோ பிரியாணியை பயன்படுத்தி 2 அடியில் தோனியின் உருவத்தை வரைந்துள்ளதுடன் ஐபிஎல் கோப்பையையும் வரைந்துள்ளார்.

மேலும் அறிவழகி, பிரியாணி பார்சல் கட்டப்பட்டு வந்த இலையை சிறிய துண்டுகளாக்கி அதில் CSK எனவும் தோனிக்கு கண்ணாடி, சட்டை காலர், தாடி, மீசை போன்றவும் அமைத்துள்ளார்.

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

Recent News