Thursday, January 23, 2025
HomeLatest News127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்த சிறுமி...!வாய் பிளக்கும் மக்கள்...!

127 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்த சிறுமி…!வாய் பிளக்கும் மக்கள்…!

சிறுமி ஒருவர் 127 மணி நேரங்கள் நடமானமாடி உலக சாதனை படைத்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த லத்தூரை சேர்ந்த சிருஷ்டி சுதிர் ஜக்தாப் என்ற 16 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

சிருஷ்டி சுதிர் ஜக்தாப், கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை 5 நாட்கள் (127 மணி நேரம்) இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கட்ட நடனமாடியுள்ளார்.

இந்த சிறுமிக்கு முன்னர் கடந்த 2018 இல் நேபாள நடன கலைஞரான பந்தனா 126 மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுமி 127 மணி நேரங்கள் தொடர்ந்து நடமாடி முன்னைய சாதனையை முறித்துள்ளார்.

மேலும் சிருஷ்டி சுதிர் ஜக்தாப் , 127 மணி நேரம் நடனம் ஆடிய பொழுது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிட இடைவெளி மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News