Tuesday, December 24, 2024
HomeLatest Newsமுகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து பண மோசடி செய்த சிறுமி!

முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து பண மோசடி செய்த சிறுமி!

முகநூலில் விளம்பரம் செய்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த மாணவியை கிருலப்பணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சொக்லேட் விளம்பரம் செய்து இவ்வாறு ஐந்து இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதன்படி, விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் கிரம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News