Friday, December 27, 2024
HomeLatest NewsIndia Newsதிருமணத்திற்காக 5 மாதத்தில் 2 தடவைகள் விற்பனை செய்யப்பட்ட சிறுமி..!

திருமணத்திற்காக 5 மாதத்தில் 2 தடவைகள் விற்பனை செய்யப்பட்ட சிறுமி..!

சிறுமி ஒருவர் (17) கடத்தப்பட்டு ஐந்து மாதங்களிற்குள் 2 தடவைகள் திருமணத்திற்காக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் குத்லா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பள்ளியில் 17 வயது சிறுமி ஒருவர் தேர்வு முடிந்த பின்னர் சுற்றுலா செல்வதற்காக ரெயில்வே நிலையத்தில் காத்திருந்த வேளை சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் சிறுமியை அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கிய நிலையில் அவர் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சிறுமிக்கு சுயநினைவு வந்த பொழுது ஒரு ஹோட்டல் அறையில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் இருந்துள்ளதுடன், அவர்கள் 3 பேரும் அவளை 27 வயது இளைஞரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதுடன் சிறுமியை அந்த நபருக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

திருமணமாகி நான்கு மாதங்களிற்கு பின்னர் சிறுமியின் கணவர் தற்செயலாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு உயிரிழக்க அவளது மாமியார் ஒரு மாத காலம் அந்த சிறுமியை சிறை வைத்துள்ளார்.

அதன் பின்னர் சிறுமியின் மாமியார் 3 லட்சம் ரூபாய் பணத்தினை வேறொரு நபரிடமிருந்து பெற்று அவளை திருமணம் செய்து வைத்துள்ளார்.அங்கு சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்தும் அது முடியாமல் போக தனது இரண்டாவது கணவரின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி ரெயில்வே காவல்துறை பணியாளர்களால் மீட்கப்பட்ட்டு குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டத்தை தொடர்ந்து ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோருக்கும், உள்ளூர் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், .
சிறுமியை விற்பனை செய்த மூன்று ஆண்களையும், ஒரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Recent News