எதிர்வரும் நவம்பர் மாதம் பாலியில் நடைபெறவுள்ள “G 20” மாநாட்டு மிகவும் முக்கியத்துவமிக்கதாக இருக்கப் போவதாக முன்னாள் சர்வதேச இராஐதந்திரி “ஜேம்ஸ் கரூசோ” தெரிவித்திருக்கின்றார்.
இந்தோனேசிய அதிபர் “ஜோகோ விடோடோ” வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், ரஷ்ய அதிபர் ‘புடின்’ மற்றும் சீன அதிபர் ‘ஜி ஜின் பிங்’ ஆகியோர் தமது “G 20” மாநாட்டிற்கான பங்குபற்றலை கடந்த 18ம் திகதி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மேற்படி இரண்டு தலைவர்களும் வருவார்களாக இருந்தால், உக்ரைன் ரஷ்ய போர் நிலைமைகளும், தாய்வான் நெருக்கடிகள் குறித்த காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இதனால் நடக்கப் போகும் “G 20” மாநாட்டை ஒரு புவியியல் அரசியல் சார்ந்த மாநாடாக கருத முடியும் என தெரிவித்திருந்தார்.
அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ‘ஜி ஜின் பிங்’ ஆகியோரின் மனநிலைகளை புரிந்து கொள்வதற்கும் அவர்களது எதிர்கால திட்டங்கள் குறித்து வெளிப்படையாக அறிந்து கொள்வதற்கும் இந்த “G 20” மாநாடு வாய்ப்பாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.