எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன.
எனினும் தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி ஏனைய நாடுகளின் ஆதரவு மற்றும் ஜி எஸ் பி வரிச்சலுகை போன்றவை இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது என்றும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.