Friday, January 24, 2025
HomeLatest Newsஇரவு திடீரென வெடித்து சிதறிய எரிபொருள் டேங்க்! தீயணைப்பு வீரர் பலி

இரவு திடீரென வெடித்து சிதறிய எரிபொருள் டேங்க்! தீயணைப்பு வீரர் பலி

கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் டேங்க் நேற்றைய தினம் இரவு (22-12-2022) திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அருகில் உள்ள எரிபொருள் டேங்குகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீயை மூன்று நாட்களில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தீயணைப்பு துறை கூறி தெரிவித்துள்ளது.

மேலும் தீயணைப்பு பணியில் ஈடுப்பட்ட ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேவியர் சோலனோ (வயது 53) என்ற அந்த வீரர், கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக தீயணைப்பு துறை தலைவர் ஜேமி பெரேஸ் தெரிவித்தார்.

Recent News