Friday, November 15, 2024
HomeLatest Newsதீவிரவாதிகளுக்கு உதவி செய்த பிரான்ஸ் நிறுவனம் !

தீவிரவாதிகளுக்கு உதவி செய்த பிரான்ஸ் நிறுவனம் !

பிரான்சை சேர்ந்த சீமெந்துத் தயாரிப்பு நிறுவனமான la farge, ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு உட்பட பல தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வழங்கியதற்காக குற்றம்சட்டப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு மேற்கத்தைய மக்களைப் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்த சந்தர்ப்பத்தில், சிரியாவில் அமைந்திருந்த நிறுவனத்தின் கிளை தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்துவதற்காக தீவிரவாதிகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்க வேண்டி இருந்ததாக நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

சிரியாவில் யுத்தம் தீவிரமடைந்த போது 6 மில்லியன் டாலர் அளவில் நிதி வழங்கியதாக நிறுவனம் தற்போது கூறியுள்ளது. இதன் காரணமாக தற்போது 778 மில்லியன் டாலர் அபராதத் தொகையை இந்த நிறுவனம் செலுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் தீர்த்து உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க பொதுச் சட்ட ஆலோசகர் mathew olsan குறிப்பிடும்போது, “ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மக்களுக்கு எதிராக செய்த அனைத்து அநீதிகளையும் மறந்து அந்த அமைப்பிற்கு நிதி வழங்கியிருந்தமை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதோடு மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. எனவே நிறுவனம் இதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Recent News