Thursday, January 23, 2025
HomeLatest Newsகாதலிக்கு 900 கோடியை வாரி வழங்கிய இத்தாலியின் முன்னாள் பிரதமர்…..!

காதலிக்கு 900 கோடியை வாரி வழங்கிய இத்தாலியின் முன்னாள் பிரதமர்…..!

இத்தாலியில் நான்கு முறை பிரதமராகப் பதவி வகித்தார். அவருக்கு இரு மனைவிகள் ஏற்கனவேயிருந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு 33 வயதான மார்தா பாசினா என்ற பெண் பாராளுமன்ற உறுப்பினருடன் காத் மலர்ந்தது. அப்போது அவருக்கு 83 வயதாகக் காணப்பட்டது.

கடந்த மாதம் 12 ம் திகதி இத்தாலியின் முன்னாள் பிரதமர் இறந்த நிலையில் தனது 56000 கோடி பெறுமதியான சொத்துக்களை முதல் மனைவியின் மகனுக்கும் மகளுக்கு பினின்வெஸ்ட் ஊடக நிறுவனத்தில் 53 சதவீத பங்குகளும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு மகள்கள் , மகனுக்கு 47 சதவீத சொத்துக்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதேவேளை பெர்லுஸ்கோனிக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களையும் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் குடும்பங்கள் இணைந்து நிர்வகிக்க வேண்டுமென உயிலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதை தவிர.தனது தம்பிக்கும் நெருங்மிய நண்பருக்கும் குறிப்பிட்டளவு சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்

இறுதி காலத்தில் காதலித்து வந்த மார்தா பாசினாவிற்கு 900 கோடி பெறுமதியான சொத்துக்களை ஒதுக்கியுள்ளதுடன் இத்தாலியின் ஆர்கோர் பகுதியில் பிரமாண்டமான வீடொன்றையும் வழங்கியுள்ளார்.

இவ் வீடானது இத்தாலியின் ஸ்டாம்பா மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான 18 ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய அரண்மனை ஆகும். இதை 1974 ம் ஆண்டு பெருந்தொகை பணம் செலுத்தி பெர்லுஸ்கோனி கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News