Saturday, November 16, 2024
HomeLatest Newsபல்வேறு தடைகளை தகர்த்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப் பெண்....!

பல்வேறு தடைகளை தகர்த்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப் பெண்….!

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி நிலைநாட்டியுள்ளார்.

குறிப்பாக இவ்வாறான சிகரங்களில் ஏறுவதற்கு வழிகாட்டிகளாக காணப்படும் ஷெர்பா வழிகாட்டிகள் மூவர் இடைநடுவே தவறி விழுந்து இறந்து விட்டதாக தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

இதேவேளை மலையில் ஏறும் ஒவ்லொரு நிமிடமும் முக்கியமானதாகக் காணப்படுவதுடன் அதி விரைவாகச் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் குழு , சீன குழு மற்றும் ஏனைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய 4 பேர் கொண்ட குழுவென மொத்தமாக மூன்று குழுக்களாக பயணத்தை ஆரம்பித்தனர்.
இவர்களில் வேறு நாடுகளைச் சேர்ந்த குழுவில் இருந்த அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஜேசன் சிகரத்தை தொட்டுவிட்டு திரும்பும் தருணம் இறந்துவிட்டதாகவும் கண்முன்னே கண்ட விடயங்களைப் பகிர்ந்துள்ளார்.

இவற்றுடன் ஏனைய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் கண்ணீரைதாரை தாரையாக பொழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகஅவர்கள் அனைவரும் அவர்களது நாடுகளில் பிரபலமானவர்களாகக் காணப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைவிட மலையேறும் பட்சத்தில் பல சாதனைக் கனவுகளுடன்மலையேறிய பலரின் உடல்களை அங்கு காண முடிந்ததாகவும் விபரித்துளார். பல்வேறு சிரமங்கள் , ஆபத்துக்களைக் கடந்து மே மாதம் 23 ம் திகதி. உலகின் மிக உயரமான எவரெட்ஸ் மலையுச்சியை அடைந்த தமிழ்ப்பெண் என்ற தடத்தைப் பதித்தார்.

Recent News