Thursday, January 23, 2025
HomeLatest Newsபுத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று!

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று!

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் இன்று (5) நடைபெற உள்ளது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கும் பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Recent News