Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஆஸ்திரேலியாவில் நகர மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு...!குவியும் பாராட்டுக்கள்..!

ஆஸ்திரேலியாவில் நகர மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு…!குவியும் பாராட்டுக்கள்..!

ஆஸ்திரேலியாவின் பாராமட்டா நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியான சமீர் பாண்டே என்பவரே இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னி நகரில் பாராமட்டா மாநகரத்தின் கவுன்சிலராக சமீர் பாண்டே பதவி வகித்துள்ளார்.

அத்துடன், பாரமட்டா நகர துணை மேயராகவும் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில் பாராமட்டா மேயராக இருந்த டோனா டேவிஸ் என்பவர் பதவி விலகியதை தொடர்ந்து மேயரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றுள்ளது.

அந்த கூட்டத்தில் சமீர் பாண்டே , பாராமட்டா நகர மேயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News