Wednesday, December 25, 2024
HomeLatest Newsபூமிக்கு அப்பால் மலர்ந்த முதலாவது பூ..!நாசா விஞ்ஞானிகள் அசத்தல்...!

பூமிக்கு அப்பால் மலர்ந்த முதலாவது பூ..!நாசா விஞ்ஞானிகள் அசத்தல்…!

பூமிக்கு அப்பால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஜின்னியா பூவினை மலர வைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான பரிசோதனை 2015 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டுள்ளது.

மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண் ஈர்ப்பு விசையில் தாவரங்களும், மலர்களும் எவ்வாறு வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்வதற்காக இந்த மலர்ச் செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.

இந்த மலரை மலரச் செய்ததன் ஊடாக விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளதுடன் அது குறித்து நாசா அறிக்கையும் வெளியிட்டுள்ளது,

அதில், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லுத்தல் போன்ற நீண்ட தூர பயணங்களிற்காக மனிதர்கள் தமக்காக சொந்த உணவைப் பயிரிட வேண்டும் என்பதற்காக விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

அந்த வகையில் இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது.

விஞ்ஞானிகள் 1970 களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருவதுடன் சுற்றுப் பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக் கொள்வது? பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது? என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றது.

சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களில் புதிய உணவின் மதிப்புமிக்க ஆதாரத்தை வழங்குகிறன்து எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், பூமிக்கு அப்பால் மலர்ந்த முதலாவது மலர் ஜின்னியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News