Thursday, January 23, 2025
HomeLatest Newsசிரிப்பு வாயுவுக்கு தடை விதித்த உலகின் முதல் நாடு!

சிரிப்பு வாயுவுக்கு தடை விதித்த உலகின் முதல் நாடு!

Hippy crack அல்லது சிரிப்பு வாயுவுக்கு உலகின் முதல் நாடாக நெதர்லாந்து தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதல் குறித்த சிரிப்பு வாயுவை வாங்கவோ, விற்கவோ, பதுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், மருத்துவம் மற்றும் கேட்டரிங் ஆகியவற்றில் முறையான பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே கஞ்சாவிற்கு அடுத்தபடியாக தவறாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாகும் இந்த Nitrous oxide வாயு. 

ஆனால் விநியோகம் செய்யும் நோக்கத்துடன் வைத்திருப்பது மட்டுமே தற்போது சட்டவிரோதமானதாக கூறப்படுகிறது.

இருப்பினும், உள்விவகார அமைச்சு தடைகளை கடுமையாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறித்த வாயுவை உள்ளிழுப்பதால் மாரடைப்பு, மயக்கம், நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, இரத்த சோகை மற்றும் கால்களில் பலவீனம் போன்றவை ஏற்படும்.

நெதர்லாந்தில் சாலை பாதுகாப்பு பரப்புரையாளர்கள் தெரிவிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏற்பட்ட 1,800 சாலை விபத்துகளுக்கு காரணம் இந்த Nitrous oxide வாயு என குறிப்பிட்டுள்ளனர்.

நைட்ரஸ் ஆக்சைடு பயன்படுத்துபவர்கள் சிறிய உலோகக் குப்பிகளில் வாயுவை வாங்குகிறார்கள், அவை சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன. 

பின்னர் பலூன்களில் அவையை நிரப்பி, உள்ளிழுக்கிறார்கள், இதற்கு உள்ளூர் மொழியில் nang என குறிப்பிடுகிறார்கள்.

Recent News