Monday, January 27, 2025
HomeLatest Newsஇலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட பஸ்! குவியும் பாராட்டுக்கள்

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட பஸ்! குவியும் பாராட்டுக்கள்

கம்பஹா, கலேகெடிஹேன “சனிரோ” நிறுவனம்   இலகுரக பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான  கனிஷ்க மாதவனின் படைப்பாற்றலால் இந்த பஸ் தயாரிக்கப்பட்டதாக சனிரோவின் தலைவர் நிலந்த தில்ருக் தெரிவித்தார்.

22 அடி நீளமும், 5 அடி 6 அங்குல அகலமும் கொண்ட இந்த பஸ் இன்ஜின் திறன் 660  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அனுசரணை வழங்கப்படுமாயின் இந்த நாட்டிலேயே பஸ் இயந்திரத்தை தயாரித்து உயர்தர பஸ்ஸை உற்பத்தி செய்ய முடியும் எனவும் நிலந்த தில்ருக் தெரிவித்தார்.

Recent News