அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் (Ketanji Brown Jackson) பதவியேற்றார்.
அதாவது, 51 வயதான கேதன்ஜி 116வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்னில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் (Joe biden), துணை அதிபர் கமலா ஹாரிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்பினப் பெண்ணை நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைக்கு நியமிப்பதாக பைடன் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.