Saturday, January 25, 2025
HomeLatest Newsமணமகனை பிடித்த வரதட்சணை என்ற பேயை செருப்பு அடியால் விரட்டிய மாமனார்...!

மணமகனை பிடித்த வரதட்சணை என்ற பேயை செருப்பு அடியால் விரட்டிய மாமனார்…!

வரதட்சணை கேட்ட மாப்பிளையை மாமனார் செருப்பால் அடித்த சம்பவம் ஒன்று பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

சமூக வலைதளங்களில் திருமண வீடுகளில் நடைபெறும் தகராறுகள் அடிக்கடி பகிரப்படுவதுண்டு. இது தொடர்பான காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மணமகள் வீட்டார் தடல் புடலாக ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த வேளை, மணமகன் தன்னுடன் மணமகளை கூட்டி செல்ல வேண்டுமாயின் வரதட்சணையாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என அடம் பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகளை செய்கின்றனர். ஆனால் மணமகனோ அதற்கு இணங்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மணமகளின் தந்தை தனது செருப்பை கழற்றி மாப்பிள்ளையை சரமாரியாக தாக்குகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத மணமகன் தனது மாமனாரிடம் அடிக்க வேண்டாமென கெஞ்சுவது போன்று அந்த காணொளியில் காட்சிகள் காணப்படுகின்றன.

Recent News