Monday, January 27, 2025
HomeLatest Newsயாழில் சுடுதண்ணீர் வைத்த பாட்டிக்கு நேர்ந்த கதி

யாழில் சுடுதண்ணீர் வைத்த பாட்டிக்கு நேர்ந்த கதி

எரி காயம் மட்டும் சுடுதண்ணீர் ஊற்றுண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி ஒரு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

 இவ்வாறு உயிரிழந்தவர் காரைநகரைச் சேர்ந்த ரத்தினம் தங்கமுத்து (வயது 80) என்பவராவார். குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைத்து பானையை தூக்க முற்பட்டவேளை சேலையில் தீ பிடித்துள்ளது.

 தீ பரவியதை அடுத்து சுடுதண்ணீர் பானை கை தவறி விழுந்த போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில்,கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு மாத காலமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி  உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

பிற செய்திகள்

Recent News