Wednesday, December 25, 2024
HomeLatest Newsவெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 6 தமிழர்களுக்கு நேர்ந்த கதி..!

வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 6 தமிழர்களுக்கு நேர்ந்த கதி..!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக சென்ற நிலையில் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மன்னார், எருக்குழும்பிட்டி கடற்பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேருடன் டிங்கி படகு ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News