Friday, November 22, 2024
HomeLatest Newsமொத்த நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறவேண்டும் - சபையில் எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு..!

மொத்த நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறவேண்டும் – சபையில் எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு..!

2048 ஆம் ஆண்டு வரை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தேசிய கொள்கையினை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மொத்த நாடாளுமன்றமும் ஒரு அரசாங்கமாக மாறவேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தவிர்ந்த வேறு எந்த மாற்று வழியும் தற்போதைய சூழலில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதை விடவும் வேறு திட்டங்களை எவரும் முன்மொழியவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அங்கீகரிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் கோட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

பொருளாதார கண்ணோட்டத்தில் எந்தெந்த வரையறைகளை நீக்கவேண்டும் எதனை தொடர்ச்சியாக வைத்திருக்கவேண்டும் என்ற தீர்மானங்கணை எடுக்கவேண்டியுள்ளதாகவும் அதற்காக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

Recent News