Monday, January 27, 2025
HomeLatest Newsமின்சார சபையின் மின்பிறப்பாக்கிகள் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்..!

மின்சார சபையின் மின்பிறப்பாக்கிகள் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்..!

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான கொலன்னாவை மற்றும் துல்ஹிரியவில் நிறுவப்பட்டுள்ள டீசல் மின்பிறப்பாக்கிகளை (ஜெனரேட்டர்கள்) தென் பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென் பகுதியில் எதிர்கொள்ளப்படும் மின்சாரம் வழங்கல் தொடர்பான சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலேயே இலங்கை மின்சார சபை இவ்வாறு தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், 30 மெகாவாட் திறன் கொண்ட இந்த 30 ஜெனரேட்டர்களுக்கு மிகவும் பொருத்தமான இடம் அம்பாந்தோட்டை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Recent News