Saturday, November 23, 2024
HomeLatest Newsபொருளாதார நெருக்கடி இன்னும் 7 வருடங்களுக்கு தொடரும்! வெளியான அதிர்ச்சித் தகவல்

பொருளாதார நெருக்கடி இன்னும் 7 வருடங்களுக்கு தொடரும்! வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் 7 வருடங்களுக்கு தொடரலாம் என பொருளாதார வல்லுநர் பிரியநாத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதுவரை சர்வதேச கடன்களை இலங்கை செலுத்த வேண்டியிருக்கும் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அனைவரும் தமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென பிரியநாத் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜூலை 25ஆம் திகதி ஒரு பில்லியன் டொலர் கடன் பத்திரத்தை செலுத்தத் தவறியதற்காக இலங்கைக்கு எதிராக அண்மையில் ஒருவர் நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஹாமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்தது. அந்த நபரின் நிறுவனம் இலங்கையில் 250 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, பத்திரத்தின் வட்டி உட்பட முழுத் தொகையையும் உடனடியாக வழங்கக் கோரி நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒரு இறையாண்மை பத்திரத்தை செலுத்தத் தவறியதை ஒரு நாடு என்ற முறையில் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடன்களை செலுத்தாமை ஒருதலைப்பட்சமான தீர்மானம் எனவும், அவ்வாறு தவறும் பட்சத்தில் நாடு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதாரப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Recent News