Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம்: வேலைவாய்ப்புடன் கைலாசாக்கு அழைக்கும் நித்தியானந்தா!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம்: வேலைவாய்ப்புடன் கைலாசாக்கு அழைக்கும் நித்தியானந்தா!

இலங்கையில்  நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறுபட்ட காரணங்களால் மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் நிலை இவ்வாறு இருக்க மறுபுறம் பல்வேறு பாலியல் வழக்குகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா தற்போது வேற்றுத் தீவொன்றில் கைலாசா எனும் பெயரில் சிறிய நாட்டினை உருவாக்கி அங்கிருந்து தனது பணிகளை ஆற்றி வருகின்றார்

இடையிடையே சமூகவலைத்தளங்கள் மூலமாக தோன்றி அவரது பக்தர்களுக்கு வேண்டிய ஆன்மீக உரைகளை நிகழ்த்துவதுடன் கைலாசா நாணயம் ,கைலாசா கடவுச்சீட்டு , கைலாசா முத்திரை என அடுத்தடுத்து புதிதுபுதிதாக பல்வேறுபட்ட மாற்றங்களை செய்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில் தற்போது கைலாஸாவில் வேலைவாய்ப்பு என ஒரு விளம்பரத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாஸா கிளைகளில் தகுந்த சம்பாவனையுடன்(ஊதியத்துடன்) கூடிய வேலை வாய்ப்பு!  

ஓராண்டு சம்பாவனையுடன் (ஊதியத்துடன்)கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாஸாக்களில் வேலைவாய்ப்பு!

    1) நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம்

    2) கைலாஸாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள்

   3) கைலாஸா IT Wing

   4) கைலாஸா   அயல்நாட்டு தூதரகம்

   5) பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல்ஸ்

மற்றும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு

 உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Recent News