Wednesday, December 25, 2024
HomeLatest Newsபங்களாதேஷில் இன்று காலை குலுங்கிய பூமி...!வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்...!

பங்களாதேஷில் இன்று காலை குலுங்கிய பூமி…!வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்…!

பங்களாதேஷில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷின் சில்ஹெட் பகுதியில் 70 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அங்கு இன்று காலை 10.16 மணியளவில் ரிக்டர் அளவில் 4.8 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.

இதனால், அச்சமடைந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் , அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவடைந்தமையால் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜூன் 11 ஆம் திகதி அசாமின் மத்திய பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News