Sunday, January 19, 2025
HomeLatest Newsமருந்து பற்றாக்குறை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்! – வெளியான அதிர்ச்சித் தகவல்

மருந்து பற்றாக்குறை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்! – வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு ஏற்கனவே பல்வேறு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, பிரதமரினால் நியமிக்கப்பட்ட சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மருந்து பற்றாக்குறை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன உறுயளித்த நிதி நாட்டுக்கு கிடைக்கப்பெறும் நிலையில், மருந்து விநியோகம் மீண்டும் சீராக முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மருந்துகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News