Thursday, January 23, 2025
HomeLatest Newsகனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம் ஆட்டையப் போட்ட சாரதி - 9 பொதிகள் அபேஸ்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம் ஆட்டையப் போட்ட சாரதி – 9 பொதிகள் அபேஸ்

கனடாவிலிருந்து வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வந்த வாகனச் சாரதி ஒருவர் பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளார்.

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது குருநாகலுக்கு அண்மையில் மதிய உணவுக்காக வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

 கனடாவில் இருந்து வந்தவர்கள் உணவகத்துக்கு சென்றுள்ளனர். வாகன சாரதி உணவருந்த அழைத்தபோது அவர் மறுத்து வாகனத்தில் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

 அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது வாகனம் அங்கு இருக்கவில்லை. வாகனத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான , பொருட்கள் அடங்கிய 9  பயணப் பொதிகள் இருந்துள்ளன. சம்பவம் தொடர்பில் குருநாகல்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் கனடாவில் இருந்து வந்தவர்கள் ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துள்ளனர்.

Recent News