Tuesday, December 24, 2024
HomeLatest Newsகடமை தவறாது பணியில் ஈடுபட்ட நாய்…!இறுதியில் நேர்ந்த துயர்..!நெகிழ்ச்சி சம்பவம்..!

கடமை தவறாது பணியில் ஈடுபட்ட நாய்…!இறுதியில் நேர்ந்த துயர்..!நெகிழ்ச்சி சம்பவம்..!

கடமை தவறாது உரிய முறையில் தனது பணியை செய்த மோப்ப நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

டாஸ் என்ற மோப்ப நாயே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

டாஸ் , கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமையாற்றி வந்துள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றில் போதைப்பொருள் அதிகளவில் நுகர்ந்தால் இந்த நாய் உயிரிழந்துள்ளது.

குறித்த தேடுதல் வேட்டை ஒன்றில் இணைந்து கொண்ட இரண்டு மோப்ப நாய்களிற்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு மோப்ப நாய்களையும் பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், டாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அத்துடன், இந்த தேடுதல் வேட்டையின் பொழுது போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் ஸ்டார்ட்போர்ட் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News