Friday, January 24, 2025

தினமும் ஹாயாக ரயிலில் பயணம் செய்யும் நாய்..!ஸ்மார்ட் பாய் என்று பெயர் வைத்த நெட்டிசன்கள்..!

மனிதர்களை போலவே நாய் ஒன்றும் தினசரி நேரம் தவறாது குறித்த ரயிலில் பயணம் செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தினமும் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் அந்த நாய் மாலை ஆனதும் அதே ரயில் நிலையத்திற்கு வேறொரு ரயில் வாயிலாக திரும்பி வருகின்றது.

நாயின் இந்த தினசரி பயணத்தைக் காட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மும்பையில் போரிவலி நிறுத்தத்தில் ஏறும் அந்த நாய் அந்தேரி ரயில் நிலையத்தில் இறங்குகின்றது. பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் போரிவலியை அது வந்தடைகின்றது.

அது ரயிலில் பயணிக்கும் யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் செய்யாது என்பதுடன், அதே ரயிலில் தினமும் பயணிப்பவர்களின் பிரியமான நாயாகவும் மாறி இருக்கின்றது.

அத்துடன் பலர் அந்த நாயின் செயலைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இணையத்தில் நாய் ரயில் பயணம் தொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோ பல லட்சக் கணக்கோரின் மனதைக் கவர்ந்துள்ளதுடன், 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த ஓர் நபர் “இந்த உலகம் அனைவருக்குமானது. அது சுதந்திரமாக வலம் வருவதை பார்க்கையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், “இவன் ஒரு ஸ்மார்ட் பாய். இவன் தினமும் இரவில் அந்தேரி ரயில் நிலையத்தில் ரயில் ஏறும்போது நான் பார்ப்பேன்” என்று கூறி உள்ளார்.

இன்னொருவர் ஒரு படி மேலே சென்று, இந்த நாயின் செயலைப் பார்ப்பதற்கு என்றே, தான் போரிவலி ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக கூறி இருக்கின்றார்.

ஆகையால் இப்போது இந்த நாய் நெட்டிசன்களின் மனம் கவர்ந்த நாயாக மாறியுள்ளது.

Latest Videos