Friday, January 24, 2025
HomeLatest Newsவிளையாட்டாக செய்த DNA பரிசோதனை விபரீதம் ஆனதால் குடும்பத்தில் வந்த குளறுபடி...!

விளையாட்டாக செய்த DNA பரிசோதனை விபரீதம் ஆனதால் குடும்பத்தில் வந்த குளறுபடி…!

பெண்ணொருவர் விளையாட்டாக DNA பரிசோதனை செய்து கொண்டுள்ள நிலையில் அதன் முடிவுகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்கர்களான டோனா ஜான்சன் (47) , வான்னர் (47) தம்பதியருக்கு Vanner Jr (18) மற்றும் Tim (12) என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

தமது பரம்பரை குறித்து அறிந்துகொள்வதற்காக, விளையாட்டாக DNA பரிசோதனையினை டோனா குடும்பத்தினர் செய்துள்ளனர்.

ஆனால், பரிசோதனை முடிவுகள் அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அந்தக் குடும்பத்தில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

அந்த தம்பதியரின் இளைய மகனான டிம், வான்னருடைய மகன் அல்ல என்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவர, தம்பதியர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டோனா வான்னர் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பெறுவதில் பிரச்சினை இருந்ததால், செயற்கை கருவூட்டல் முறையின் மூலம் முயற்சி செய்துள்ளனர்.

அந்த நிலையில், சிகிச்சை மையத்துக்கு டெவின் மற்றும் கெல்லி என்னும் தம்பதியரும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது சிகிச்சை மையத்தினர் இரண்டு பெண்களின் கருமுட்டைகளுடனும், டெவினுடைய உயிரணுக்களை தவறுதலாக இணைத்துள்ளனர்.

இந்நிலையில், டோனாவின் இளைய மகனான டிம்முடைய உண்மையான தந்தை டெவின் என தெரிய அதிர்ச்சியடைந்த தம்பதியர் மன நல ஆலோசனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மகனுக்கு எதிர்காலத்தில் உண்மை தெரியவந்தால் என்ன நிலைமை என பயந்து, டிம்முக்கு 12 வயதானதும், மெதுவாக அவனிடம் உண்மையை கூறியுள்ளனர்.

அதனால், அவன் தன் உண்மையான தந்தையை சந்திக்க விரும்ப, டோனா குடும்பத்தினர், டெவின், கெல்லி தம்பதியரை சந்தித்துள்ளனர்.

உண்மை இரண்டு குடும்பங்களையும் அதிர்ச்சியடைய வைக்க, தங்கள் மகனை தங்களிடமிருந்து பிரித்து விட வேண்டாம் என டோனா டெவினிடம் கோர, இப்போது, இரண்டு குடும்பங்களும் நண்பர்களாகி உள்ளனர்.

இரண்டு குடும்பங்களும் அவ்வப்போது சந்தித்து உறவாடிக் கொள்வதுடன், தங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் குளறுபடி செய்த சிகிச்சை மையத்திடமிருந்தும் இழப்பீடும் பெற்றுள்ளார்கள்.

Recent News